16 வகை காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் : கேரள அரசின் புதிய திட்டம்

16 , பழங்களுக்குக் குறைந்தபட்ச விலையைக் கேரள அரசு நிர்ணயித்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நாளை முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

by Balaji, Oct 31, 2020, 12:57 PM IST

முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாகக் காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து கேரளா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், காய்கறிகளின் சந்தை விலை சரிவைச் சந்தித்தாலும், விவசாயிகளிடம் இருந்து அடிப்படை விலையை வைத்தே காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக16 வகை காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வெள்ளைப்பூண்டு, அன்னாசிப் பழம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ், நேந்திரம் பழம், தக்காளி, கேரட், பாகற்காய், புடலங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், மரச்சீனி கிழங்கு, பட்டாணி, பூசணிக்காய் ஆகிய 16 காய்கறி, பழங்களுக்கு இத்தகைய குறைந்தபட்ச விலையைக் கேரள அரசு நிர்ணயித்துள்ளது.

உற்பத்தி செலவை விட 20 சதவீதம் அதிகம் இருக்கும் வகையில் ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது.இதனால் மார்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் அரசு நிர்ணயித்த விலை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.இத்திட்டத்தின்கீழ்
அதிகபட்சமாக ஒரு விவசாயி ஒரு பருவத்தில் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் காய்கறிகளை, விற்பனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தங்கள்u விவசாய நிலத்தைக் காப்பீடு செய்து பின் விவசாயத்துறையில் பெயர் பதிவு செய்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் கேரளாவில் நாளை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

You'r reading 16 வகை காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் : கேரள அரசின் புதிய திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை