மத்திய அரசின் அவசரகால கடனுதவி திட்டம், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசரகால கடனுதவி திட்டம் மேலும் ஒரு மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

by Loganathan, Nov 3, 2020, 21:00 PM IST

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மீள்வதற்காக ரூ.20 இலட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ரூ.3 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அக்டோபர் இறுதி வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.3 இலட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கு எட்டப்படவில்லை. எனவே இத்திட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் அளவு நவம்பர் மாத இறுதியிலும் எட்டப்படவில்லை என்றால் இந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குள் இலக்கு எட்டப்பட்டால் அத்துடன் திட்டம் முடிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 60.67 இலட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.03 இலட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.1.48 இலட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading மத்திய அரசின் அவசரகால கடனுதவி திட்டம், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை