இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (PAC- Public Affair centre) மூலம் ஒவ்வொரு வருடமும் மாநிலத்தின் பங்குகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மூலம் மாநிலத்தில் உள்ள அரசுகளின் செயல்திறன், சட்டம் ஒழுங்கு, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதின் தரம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொது விவகாரங்கள் குறியீடு வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொது விவகாரங்கள் குறியீடு 2020 பட்டியலைப் பெங்களூரில் உள்ள பொது விவகாரங்கள் மையம் வெளியிட்டுள்ளது.
மேற்கூறிய ஐந்து அம்சங்களைக் கொண்டு மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு அதில் சிறந்த செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தும் மாநிலமாகக் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு மாநிலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாநிலங்கள் முறையே
* கேரளா
* தமிழ்நாடு
* ஆந்திரப்பிரதேசம்
* கர்நாடகா
* சத்தீஸ்கர்
மேலும் மத்திய அரசின் ஆட்சி பகுதிகளான யூனியன் பிரதேசங்களில் முதல் இடத்தை சண்டீகரும், இரண்டாவது இடத்தை புதுச்சேரி பிரதேசமும் பெற்றுள்ளது.பொது விவகாரங்கள் குறியீடு 2020 ல் மிக மோசமான மாநிலமாக உத்திரப்பிரதேசமும், யூனியன் பிரதேசங்களில் தாத்ரா நாகர்வேலியும் இடம் பிடித்துள்ளன.