நயன்தாராவை பங்கமாய் கலாய்க்கும் சூப்பர் மாடல் மீரா மிதுன்..!

by Logeswari, Nov 5, 2020, 15:47 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் மாடலாய் நுழைந்து பல சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் மீரா மிதுன். முதலில் பவ்வியமாய் இருந்த மீரா மிதுன் நாள்கள் செல்ல செல்ல அவரின் உண்மையான முகத்தை வெளியே காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால் எதுவும் கிடைக்காததால் முக்கிய பிரபலங்களை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவை எல்லாம் அவரை மீடியாவில் பிரபலமாக்கச் செய்யும் சதிகள் என்று தகவல்கள் கசிந்தது.

அந்த வலையில் முதலில் சிக்கியது நடிகை திரிஷா. இவரைத் தொடர்ந்து ஐஷ்வர்யா ராஜேஷ், சூர்யா, ஜோதிகா போன்ற முக்கிய ஆட்களை வம்புக்கு இழுத்தார். ஆனால் யாரும் மீரா மிதுனை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் சூர்யாவின் ரசிகர்கள் மீராவை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டனர். பல கொலை மிரட்டல் வந்ததால் சென்னையை விட்டு மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.

சில நாட்களுக்கு பிறகு பழைய குருடி கதவை திறடி போல் பல வித கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டி கொண்டார். இவ்வளவு நடந்தும் மீரா மிதுன் சும்மா இல்லாமல் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பற்றி பயங்கரமாக விமர்சித்துள்ளார். அதாவது அடுத்தவன் புருஷனை கைக்குள் வைத்திருந்த ஒருத்திக்கு அம்மன் வேடமா?? என்று நயன்தாராவை கீழ் தனமாக ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இதனைப் பற்றி நயன் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரசிகர்கள் மீராவை அசிங்க அசிங்கமாகத் திட்டிவருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை