ஏர் ஏசியா நிறுவனம், அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.99 சலுகை கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.444 சலுகை கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் விமானத்தில் பறக்கலாம்.
இந்தச் சலுகையைப் பெற நவம்பர் 19-ம் தேதி வரையில் மொபைல் ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, கட்டணச் சலுகையில் பெங்களூரு, ஹைதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.
ஏர் ஏசியா எக்ஸ் பெர்ஹாட், ஏர் ஏசியா பெர்ஹாட், இந்தோனேசியா ஏர் ஏசியா எக்ஸ், தாய் ஏர் ஏசியா, மற்றும் இந்தோனேசியா ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
ஏர் ஏசியாவுடன் இணைந்துள்ள பிரதான மொபைல் வாலட்டான மொபிக்கிவிக் ஆப் மூலமாக ஆண்டு இறுதி கொண்டாட்டமாக விமான டிக்கெட் புக் செய்யும்போது கட்டணத்தில் ஆயிரம் ரூபாய் சலுகைளை பெறலாம்.
அத்துடன், விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் என்றும் முன்பதிவு செய்துவிட்டால் பயணத்தொகை திரும்ப அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.