கடைசி நிமிடம் வரை காத்திருந்து ஏமாந்த தமிழகம் - முதுகில் குத்திய மோடி அரசு

கடைசி நாளின் கடைசி நிமிடங்களில் கூட, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகளின் முதுகில் குத்தியிருக்கிறது மோடி அரசு.

Mar 30, 2018, 08:36 AM IST

கடைசி நாளின் கடைசி நிமிடங்களில் கூட, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகளின் முதுகில் குத்தியிருக்கிறது மோடி அரசு.

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் கொள்வதற்கான ‘திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடி வடைந்தது. ஆனால், கடைசி வரை காவிரி தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் மோடி அரசுதமிழக மக்களை ஏமாற்றி விட்டது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, ஏற்கெனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில், “காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை 177.25டிஎம்சி என்றும், கர்நாடகத்திற்கு உரிய தண்ணீரை 284.75 டிஎம்சி என்றும் பங்கீடு செய்த உச்ச நீதிமன்றம், இதனடிப்படையில் மாநிலங்கள் நீரைப் பங்கிட்டுக்கொள்ள நடுவர் மன்றம் பரிந்துரை செய்தபடி ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசுஉருவாக்க வேண்டும்” உத்தரவிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அணையின் கட்டுப்பாட்டை கர்நாடக அரசிடமிருந்து பறிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை ஏற்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

இதற்கிடையில், உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, மேலாண்மை வாரியம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்று புதிய வியாக்யானம் கொடுக்க ஆரம்பித்தது. நடுவர் மன்றம் பரிந்துரைத்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையையோ, நடுவர் பரிந்துரைத்தது மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று ஆணையத்தையும் தான் என்பதையோ வசதியாக மறைத்தது.

அத்துடன் கர்நாடக அரசு கூறியிருந்தபடி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ‘காவிரி மேற்பார்வைக்குழு’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தவும் தீர்மானித்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், திடீரென உச்ச நீதிமன்றம் கூறிய ‘ஸ்கீம்’ என்னவென்று உச்ச நீதிமன்றத்திடமே விளக்கம் கேட்கப் போவதாக பிரச்சனையைக் காலம் கடத்தும் முயற்சியில் இறங்கியது.

6 வாரங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு, கெடு முடிவதற்கு ஒருநாள் முன்னதாக மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, மார்ச் 29-ஆம் தேதிதான் முடிந்தது. கடைசி நிமிடத்தில் கூட மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல், மோடி அரசு தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கடைசி நிமிடம் வரை காத்திருந்து ஏமாந்த தமிழகம் - முதுகில் குத்திய மோடி அரசு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை