ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் விளையாட்டு விளையாடாதீர்கள் - கமல்ஹாசன் கறார்

காவிரி மேலாண்மை விவகாரத்தில், அரசியல் விளையாட்டு விளையாடாதீர்கள் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அரசியல் விளையாடினால் அது ஓட்டு வேட்டைக்கான வழி என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Mar 30, 2018, 08:08 AM IST

காவிரி மேலாண்மை விவகாரத்தில், அரசியல் விளையாட்டு விளையாடாதீர்கள் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அரசியல் விளையாடினால் அது ஓட்டு வேட்டைக்கான வழி என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய கமல்ஹாசன், “காவிரி வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பது தான் மக்கள் நீதி மையத்தின் நிலைப்பாடு. இப்போது ஸ்கீம் திட்டத்திற்கு விளக்கம் கேட்பது, தாமதத்திற்கான வழி. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ-யிலேயே ஸ்கீம் என்றால் என்னவென்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அரசுகள் செய்ய வேண்டும். இதில், அரசியல் விளையாடினால் அது ஓட்டு வேட்டைக்கான வழி. இந்த விவகாரத்தில், அரசியல் விளையாட்டு விளையாடாதீர்கள் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மக்களுக்கான தேவை என்ன என்பதை பாருங்கள்.

இன்று முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். வலியுறுத்த வேண்டியது கடமை. அதற்கான முயற்சிகள் எல்லா தரப்பிலும் எடுக்க வேண்டும். ஏப்.1 தூத்துக்குடி மக்களுடன் சேர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து போராட உள்ளேன். போபால் போன்ற பேரழிவு தூத்துக்குடியில் ஏற்பட்டு விடக் கூடாது.

காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல. மத்திய அரசு நினைத்தால் செய்யலாம். காவிரி பிரச்னைக்காக தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம். அதே சமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன். தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம் அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.

காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு கமல் பேசி உள்ளார். நேற்று அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், பார்லிமென்டில் பேசும்போது, ’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எங்கள் எம்பிக்கள் தற்கொலை செய்வோம்’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு தான், தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் விளையாட்டு விளையாடாதீர்கள் - கமல்ஹாசன் கறார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை