பீகார் தேர்தலில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முன்னணியில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல பாஜகவும் காங்கிரசும் சமநிலையை வந்து இழுபறி நிலையை எட்டியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது மொத்தம் 126 இடங்களில் பாஜக கூட்டணியும் 104 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னணியில் இருந்தன. சிறப்பாக லோக் ஜன சக்தி கட்சி மிகவும் பின்தங்கி மூன்று இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.ஆகக் கிட்டத்தட்ட பாஜக கூட்டணி பீகாரில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. 17 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.இங்கு பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது