தற்காலிக உடன்பாடு காரணமாக தீபாவளிக்கு புதுப்படங்கள் ரிலீஸ் பாரதிராஜா அறிவிப்பு

by Balaji, Nov 10, 2020, 15:07 PM IST

வி.பி.எப் கட்டணம் குறித்து தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு உள்ளதால் முகவரிக்கு இப்போது படங்கள் ரிலீஸ் செய்யப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:தீபாவளிக்கு புது படங்கள் திரையிடுவதில் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 வாரங்களுக்கு இருதரப்பும் இணக்கமாக இருப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.

திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான், VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு தனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது!

திரையரங்கங்களுடன் எங்களுக்குப் பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்குப் பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை