ஹைதராபாத்தில் உள்ள தனியார் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் 30 கோடி டோஸ் அளவு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா, ஹைதராபாத் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா வியாதிக்குத் தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சர்வதேச அளவில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மூலப்பொருள் இன்று கண்டெய்னர் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தது. ரஷ்ய நாட்டுடன் மேற் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஹைதராபாத்தில் செயல்படும் டாக்டர் ரெட்டீஸ் லேப் கொரோனா தடுப்பு மருந்தைத் தயார் செய்ய உள்ளது. இந்த மருந்து தயார் செய்யப்பட்ட பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.