உலகின் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம், தெலுங்கானாவில் 3 தரவு மையங்களை அமைக்க 207.61 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது .இந்த முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் அமேசான் மூன்று டேட்டா சென்டர்களை தொடங்க உள்ளது. ஒன்று பவர், மற்றொன்று குளிரூட்டல், பிசிகல் செக்யூரிட்டி, நெட்வொர்க் வழியாகச் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் 2022ன் ஆண்டின் மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்மூலம், வருங்காலங்களில் மேலும் பல நிறுவனங்கள் தெலுங்கானாவில் தங்களது தரவு மையங்களை அமைக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. அமேசானின் இந்த டேட்டா சென்டர், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையைப் பல மடங்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . டேட்டா மையங்களை நிறுவுவதான் மூலம் ஈ-காமர்ஸ் , பொதுத்துறை. வங்கித் துறை, நிதித்துறை, இன்சூரன்ஸ், ஐடி உள்ளிட்ட பல துறைகளின் செயல்பாட்டினை இது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஹைதராபாத் ஐடி துறையில் மிக உயர்ந்த வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது . தெலுங்கானா அரசின் ஒத்துழைப்பு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அமேசான் நிறுவனம் கருதியதால் தான் அமேசான் தெலுங்கானவை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வலுவான கட்டமைப்பு, அரசின் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஹைதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தினை கொண்ட அமேசான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தை உடனான தனது உறவை மேலும் வலுப்படுத்துகிறது.