கேரளாவில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

by Nishanth, Nov 12, 2020, 17:07 PM IST

கேரளாவில் தீபாவளிக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவில் 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் என்று கேரள உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் முதலில் பட்டாசு வெடிக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் காலையிலும், இரவிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவிலும் தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் கேரளாவில் ஓணம் மற்றும் சித்திரை விஷு பண்டிகை தான் கோலாகலமாகக் கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை. குறிப்பாகத் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்படத் தென் மாவட்டங்களில் மட்டும் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிக்குப் புத்தாடை அணியும் பழக்கம் இல்லை என்றாலும் மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடிப்பது உண்டு.

இந்நிலையில் கேரளாவில் இவ்வருடம் தீபாவளிக்கு இரவில் 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும். அதிலும் பேரியம் நைட்ரேட் சேர்க்கப்படாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். தீபாவளி தவிரக் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு நள்ளிரவில் 11. 55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க முடியும். கேரள உள்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

You'r reading கேரளாவில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை