ஸ்டேட் பாரத வங்கியில் வீடு கட்ட கடன் வாங்குவோருக்கு இன்று ஒரு நாள் மட்டும் செயலாக்கக் கட்டணம் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியாண்டின் கடைசி நாளான இன்று பாரத ஸ்டேட் வங்கி இன்று ஒரு நாளுக்காக அதிரடி ஆஃபர் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் எஸ்.பி.ஐ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹோம் லோன் எனப்படும் வீடு கட்டுவதற்காக வாங்கப்படும் கடன்களுக்கு செயலாக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு கடனுக்காக இன்றே வங்கிக்கு வந்து பதிவோருக்கு அதிரடி வட்டி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பெண்களுக்கு என சிறப்பு சலுகைகளும் உள்ளதாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான வீட்டு கடன் 30 லட்சம் ரூபாய் வரையில் 8.35% வட்டியுடனும் வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையிலாந வீட்டு கடன் 8.45% வரையிலும் வழங்கப்பட உள்ளது. நாட்டிலேயே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக வீடு கட்ட கடன் வழங்கியுள்ள மிகப்பெரிய வங்கியாக ஸ்டேட் பாரத வங்கி கருதப்படுகிறது.