பாபநாசம் பார்த்திருக்கிறேன் மிஸ்டர் கமல்..!- கமலை சிலிர்க்க வைத்த ஹாலிவுட் இயக்குநர்

by Rahini A, Mar 31, 2018, 12:07 PM IST

கமல்ஹாசனின் 'பாபநாசம் ' திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் டர்ன்கிரிக் நோலன் பார்த்து ரசித்ததாகக் கூறியது கமல்ஹாசனை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

ஹாலிவுட் திரை உலகில் சமீபத்திய ஹிட் ஆஸ்கர் படமான 'டர்ன்கிரிக்' உள்பட பாலோயிங்', 'மெனாண்டோ', 'பிரஸ்டீஜ்', 'இன்செப்ஷன்', 'பேட்மேன் ட்ரையாலாஜி', 'இன்டர்ஸ்டெல்லர்' எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.

மும்பையில் நேற்று டெக்னாலஜி இல்லாமல் இன்றைய காலகட்டத்திலும் பிலிம் ரோல்களில் படம்பிடிப்பது குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இத்ல் இந்தியாவின் சிறந்த திரை நடசத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். அமிதாப் பச்சன், மணிரத்னம், கமல்ஹாசன், சந்தோஷ் சிவன், எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்துகொண்ட ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தானே முன்வந்து இதில் பங்கேற்று கலந்துரையாட விருப்பம் தெரிவித்துப் பங்கேற்றார். உலகளவில் டெக்னாலஜி மயம் விண்ணைத்தாண்டி பயணிக்கும் காலத்தில் இன்னமும் பிலிம் ரோல்களில் படம் எடுக்கும் ஆஸ்கர் நாயகன்தான் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கமல்ஹாசன் உடனான கலந்துரையாடலின் போது 'டர்ன்கிரிக்' திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் பார்த்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் அவரிடம் 'ஹே ராம்' திரைப்படத்தின் டிவிடி வடிவத்தை அளித்தபோது, நோலன் 'பாபநாசம்' திரைப்படம் பார்த்த அனுபவம் குறித்து கமல்ஹாசனிடம் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாபநாசம் பார்த்திருக்கிறேன் மிஸ்டர் கமல்..!- கமலை சிலிர்க்க வைத்த ஹாலிவுட் இயக்குநர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை