ரயில்வே துறையில் காலிப் பணியிடங்கள்: 2.8 கோடி பேர் விண்ணப்பம்!

by Rahini A, Mar 31, 2018, 12:43 PM IST

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்பட்டனர்.

ரயில்வே துறையின் அழைப்பின் பேரில் 2.8 கோடி பேர் வேலைக்கு விண்ணப்பித்து ரயில்வே துறையை விழிபிதுங்க வைத்துள்ளனர். நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வே துறையில் 13 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், லெவல் 1 மற்றும் லெவல் 2-வில் காலியாக இருக்கும் 90,000 இடங்களுக்கு ரயில்வே துறையால் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கு 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ரயில்வே துறையும் தெரிவித்துள்ளது.

இந்த இந்திய அளவில் மட்டமல்லாமல் உலக அளவில் நடக்கும் மிகப் பெரிய ஆட்சேர்ப்பு நிகழ்வு எனப்படுகிறது. 90,000 பேரை புதிதாக வேலைக்கு எடுப்பதன் மூலம் ரயில்வே துறைக்கு 40,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரயில்வே துறையில் காலிப் பணியிடங்கள்: 2.8 கோடி பேர் விண்ணப்பம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை