உலக சுகாதார நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா!

by Loganathan, Nov 17, 2020, 18:38 PM IST

கொரோனா பாதிப்பு தொடங்­கிய காலம் முதல் இதுவரை உலக சுகா­தார நிறுவனத்­தின் தலை­மை­யகத்­தில் பணிபுரியும் 65 ஊழியர்­க­ளுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்­பட்டி­ருப்­ப­தாக தகவல் வெளியா­கியுள்­ளது.இது குறித்து உலக சுகா­தார அமைப்பு வெளி­யிட்ட அறிக்கை­யில் கூறிய­தாவது, கொரோனா தொடங்கியதில் இருந்து இதுவரை
65 ஊழியர்­க­ளுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது.

வெளிநாடுகளில் பணிபு­ரிபவர்­கள் மற்றும் வீட்டில் இருந்தே பணிபுரிபவர்­களும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அடங்­குவர்.தலை­மை­யக வளாகத்­தில் வேறுயாருக்­கா­வது கொரோனா பாதிப்பு பரவியுள்ளதா என்று பரி­சோ­திக்­கப்­பட்டு வருகி­றது. ஜெனீவா தலைமையக ஊழியர்­க­ளுக்கு தேவை­யான மருத்­துவ உதவிகள் செய்­யப்­பட்டுள்­ளன.

உலக சுகா­தார அமைப்புடன் தொடர்பு­டைய அனை­வ­ரையும் தட­ம­றிந்து கொரோனா பரி­சோ­தனை செய்­ய­வும், தேவை­யான பாதுகாப்பு முன்­னெச்­சரிக்கை நடவடிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் நடவடிக்­கை­கள் எடுக்­கப்­பட்டுள்­ளன. கடந்த 8 வாரங்களில் மட்டும் 49 பேர் பாதிக்­கப்பட்டுள்­ள­னர் இவ்­வாறு அறிக்­கை­யில் கூறப்­பட்டுள்­ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்­க­லைக்­கழக புள்ளிவிபர தகவலின்­படி உலக அளவில் இதுவரை
5 கோடியே 46 லட்­சத்து 78 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதில் 13 லட்­சத்து 21 ஆயிரத்து 403 பேர் பலி­யாகியுள்­ள­னர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை