திருப்பதியில் நான்கு நாட்கள் தங்கியது ஏன்? பொன் ராதாகிருஷ்ணனால் பொங்கிய சர்ச்சை

by Balaji, Nov 19, 2020, 18:53 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நான்கு நாட்களாகத் திருமலையில் முகாமிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 15ஆம் தேதி திருமலைக்கு வந்தார். கோவிலில் அவர் தொடர்ந்து நான்கு நாட்களாகத் திருப்பதி லேயே தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்தார். இடையில் ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் இரண்டு முறை தரிசனம் தரிசனம் செய்தார். இன்று மீண்டும் ஏழுமலையானைத் தரிசனம் செய்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் என்ற அடிப்படையில் நான்கு நாட்கள் திருமலையிலேயே தங்கியிருந்து ஏழுமலையானையும், ஸ்ரீகாளகஸ்தி கோவிலிலும் அவர் தரிசனம் செய்து வருகிறார்.

சாதாரண பக்தர்கள் ஒரு முறை தரிசனம் செய்தால் மீண்டும் ஒரு மாதத்திற்குத் தரிசனம் செய்ய முடியாது, தேவஸ்தான விடுதிகளில் ஒரு நாளுக்கு மேல் யாரும் தங்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அப்படி இருக்க முன்னாள் மத்திய அமைச்சர் என்ற நிலையில் நான்கு நாட்களாகத் திருமலையிலேயே தங்கி பொன் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து வருகிறார். இது தேவஸ்தான அதிகாரிகள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.பாஜக மூத்த தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு கூட ஏழுமலையான் கோவிலில் விஐபிக்கள் ஆண்டில் ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி வந்து சாதாரண பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து திருமலையில் தங்கி விஐபி ஒதுக்கீட்டில் தரிசனம் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இலவச தரிசனத்தில் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் கட்டணம் தரிசனத்தில் அதிக அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே 50 சதவீத பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதிக்க வேண்டும் என ஆந்திர முதல்வரைக் கேட்டுக் கொள்ள உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இப்படிச் சொல்லி விட்டுச் சென்ற பொன் ராதாகிருஷ்ணன் விஐபி நிலையில் அவரே தொடர்ந்து திருமலையில் தங்கி தரிசனம் செய்து வருவது என்ன நியாயம் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை