பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை தன் மகன் உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரை சார்ந்தவர் வாங்(76). சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவரது மகன் மா(58). நேற்று இருவரும் நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டிற்க்கு திரும்பும் வேலையில் மா மட்டுமே தனியாக வந்துள்ளார். மாவின் மனைவி தனது அத்தையை பற்றி கேட்டபொழுது பதில் அளிக்காமல் மௌனமாய் இருந்துள்ளார். இரண்டு நாட்கள் கழிந்தும் வாங் வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த மாவின் மனைவி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது வாங் சில காலங்களாக பக்கவாதத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். என்னை பெற்ற தாய் என் கண் முன்னே வேதனைப்படுவதை என்னால் சகிக்க முடியவில்லை. இதனால் அவரது தாயை உயிருடன் மண்ணில் குழி தோண்டி புதைத்துவிட்டதாக கூறினார். போலீஸ் சம்பவ இடத்திற்க்கு விரைந்து பார்த்த போது குழிக்குள் இருந்து ஏதோ முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மூதாட்டி உயிருடன் இருப்பதாக அறிந்த போலீஸ் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாயை கொலை செய்ய முயற்சி செய்ததால் மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் கைது செய்துள்ளனர்.