திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது .
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நான்கு நாட்களாகத் திருமலையில் முகாமிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 15ஆம் தேதி திருமலைக்கு வந்தார்.
கொரானா ஊரடங்கு தளர்வுகளுக்குபின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில் 300 ரூபாய் கட்டண டிக்கெட் மூலம் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகத் தினமும் 6000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது
ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசனம், கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்கள் பக்தர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக விலைக்கு விஐபி தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பி களின் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.