திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கடந்த ஜூண்மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசனம், கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்கள் பக்தர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வார விடுமுறைநாளான கடந்த ஞாயிற்று கிழமை ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் பிறகு முதல் முறையாக 2.93 கோடி ரூபாயை எட்டியது. வழக்கமாக இக் கோவில் தினமும் ஒரு லட்சம் பேர் வரை சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு குறைந்த அளவு பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் அதிகபட்சமாகக் காணிக்கை சேர்ந்தது இதுவே முதல் முறையாகும்.