டெல்லியில் கடந்த ஆகஸ்டு மாதம் காவல்துறையினருக்கு புதிய ஊக்க திட்டம் ஒன்றை அறிவித்தது அம்மாநில அரசு. ஆம்! அது என்னவென்றால் காணாமல் போன குழந்தைகளை மீட்க வேண்டும் என்பதை அத்திட்டம் ஆகும். மேலும் இத்திட்டத்தின் படி 50 அல்லது அத்ற்கு அதிகமான குழந்தைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கபபடும் என அறிவித்தது டெல்லி அரசு.
டெல்லியில் 14 வயதிற்குள்ளான சிறுவர்களை கண்டுபிடிபதற்காக இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்படி காவல் அதிகாரி சீமா தாக்காவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வருடத்தில் 50 குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்து வந்த நிலையில் மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா் இந்த சீமா தாக்கா. மேலும் அவர் கண்டுபிடித்த 76 குழந்தைகளில் 50 குழந்தைகள் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் பல்வேறு மாநிலங்களுக்கு தொடர் பயணமும் செய்துள்ளாா். அதனால் புதியதிட்டத்தின், கீழ் சீமாவுக்கு முதல் பதவி உயர்வு கிடைக்கும் என ஊடகங்களில் பேசப்படடு வருகிறது.