2015 சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாம் பிடித்தவர்கள் முறையே, டினா டாபி மற்றும் ஆதார் அமீர்கான் இருவரும். டினா டாபி ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்டவர். ஆதார் அமீர்கான் காஷ்மீரை பூர்விகமாக கொண்டவர். முசோரியில் ஐஏஎஸ் பயிற்சி எடுத்தபோது இருவரும் காதல்வயப்பட்டு 2018ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதம் மாறி திருமணம் செய்ததால் இருவரது திருமணம் அப்போதே விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையே, இவர்களின் காதல் திருமணம் தற்போது கசந்துள்ளது. 2 வருட இல்லற வாழ்க்கைக்கு முடிவு கட்டும் வகையில் இருவரும் தற்போது விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜெய்ப்பூரில் பணியாற்றி வந்த இருவரும் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் தனது பெயரிலிருந்து 'கான்' ஐ நீக்கினார் டினா டாபி. அதேபோல், இன்ஸ்டாகிராமில் டினாவை அன்பாலோ செய்தார் ஆதார் அமீர்கான். அப்போதே இருவரும் பிரியப்போவதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.