உ பி யில் கொடூரம் 2 பிஞ்சு குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்து கொலை

by Nishanth, Nov 21, 2020, 17:56 PM IST

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பிஞ்சுக் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பலாத்காரம் செய்து கொல்லப்படும் கொடூர சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாகக் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று வயது பிஞ்சுக் குழந்தையைப் பலாத்காரம் செய்து கொன்று கல்லீரல் உள்பட உடல் உறுப்புகளைத் தோண்டி எடுத்துச் சமைத்துச் சாப்பிட்ட மிகக் கொடூர சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் பட்டப்பகலில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டரை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அடுத்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆக்ராவை சேர்ந்தவர் அஜய் சிங்கால். டாக்டரான இவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிஷா சிங்கால் (38). இவர் பல் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று டாக்டர் நிஷா சிங்கால் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். கணவர் அஜய் சிங்கால் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கேபிள்டிவி மெக்கானிக்கான சுபம் என்பவர் டாக்டர் நிஷாவின் வீட்டுக்குச் சென்றார். செட்டாப் பாக்ஸ் சார்ஜ் செய்வதற்காக அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டுக் கதவைப் பூட்டிய அவர், திடீரென டாக்டர் நிஷாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் அலறினார். சத்தத்தைக் கேட்டு அடுத்த அறையிலிருந்த அவரது குழந்தைகள் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர், டாக்டர் நிஷாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைப்பார்த்த அந்த குழந்தைகள் கூக்குரலிட்டன. அந்த குழந்தைகளையும் கத்தியால் அந்த வாலிபர் காயப்படுத்தினார். இதன்பிறகு அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றார். சத்தத்தைக் கேட்டு அடுத்த வீட்டினர் சென்று பார்த்தபோது நிஷா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் தப்பி ஓடிய மெக்கானிக் சுபத்தைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. டாக்டர் நிஷாவுக்கும், கொலையாளிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை