கடன்களை வசூலிப்பதில் சிக்கல் திணறும் நிதி நிறுவனங்கள்

by Balaji, Nov 21, 2020, 19:21 PM IST

கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு புதிய பிரச்சனையை தற்போது எதிர்கொண்டு வருகிறது.வழக்கமாக வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடன் பெறுபவர்கள் மாதாமாதம் தவணை தங்களது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும் வசதியை செய்து கொடுப்பது தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆட்டோ டெபிட் எனப்படும் இந்த சேவை மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் கடனுக்கான மாதாந்திரத் தவணையைக் கடன் வழங்கிய வங்கி அல்லது நிறுவனம் பெற்றுக் கொள்ளும். தற்போது அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் அடிப்படையில் தான் தவணைத் தொகை வசூலிக்கிறது.

இந்த நிலையில் குரானா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக நாட்டு மக்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் வருவாயை இழந்து தவித்து வருகின்றனர்.அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் கடன் பெற்ற பெரும்பாலானோர் மாதாந்திரத் தவணையை உரியக் காலத்தில் செலுத்த முடியாமல் போய்விட்டது.இப்படி நிதிநிலை மோசமாக இருக்கும் காரணத்தால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் நடைமுறையில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான தோல்விகளைச் சந்தித்து வருகின்றன.

பெரிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடனுக்கான தவணை தொகையை உள்நிதிமுறையின் கீழ் வசூலிக்கும் காரணத்தால் இந்த பரிவர்த்தனை தரவுகள் தேசிய தானியங்கி தீர்வக (NACH )தளத்திற்குக் கிடைக்காது.

தற்போது கடனை செலுத்தாத வாடிக்கையாளர்களில் பெருமளவு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப். சி ) வாடிக்கையாளர் தான் எனத் தேசிய தானியங்கி தீர்வகம் ( NACH- National Automated Clearing House) தெரிவித்துள்ளது.பெருமளவிலான வாடிக்கையாளர்கள் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் என்பிஎப்சி அமைப்புகள் தங்களது கடன் கணக்கில் சுமார் 2.5 சதவீத கடன்களை மறுசீரமைப்பு நிதி தேவைக்காகப் பின்டெக் நிறுவனங்களில் இருந்து கடன் பெறுகிறார்கள். இதனால் கடன் சுமை அதிகரித்து வரும் காரணத்தால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டு உள்ளனர்.

சில பின்டெக் நிறுவனங்கள் மக்களின் அவசரத்தையும், பணத்தின் தேவையையும் வர்த்தகமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்து தனிநபர் கடன்களுக்கு 30 சதவீத வரை வட்டி விகிதங்களை வழங்கியிருக்கிறது. .

பின்டெக் நிறுவனங்களின் பிணையற்ற கடன் தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க நாட்டின் முன்னணி பின்டெக் நிறுவனமான மணி டேப் ( Moneytap) நிறுவனத்தின் துணை நிறுவனரான அனுஜ் காக்கர் 6 மாதம் கடன் சலுகைக்குப் பின்னரே வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading கடன்களை வசூலிப்பதில் சிக்கல் திணறும் நிதி நிறுவனங்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை