மும்பை புறநகர் பாந்த்ராவில், உள்ள பேக்கரி பெயர் `கராச்சி' (பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரம்). இந்தக் கடடைக்குச் சென்ற சிவசேனா தொண்டர் நிதின் நந்த்கோன்கர் கடை உரிமையாளரிடம் கடையின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் "மும்பையில் கராச்சி பெயர் வேண்டாம். கராச்சி பெயரில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு, கராச்சி என்ற வார்த்தையை 15 நாட்களில் மாற்றிவிட வேண்டும்" என்று மிரட்டல் விடுத்தார்.
பேஸ்புக்கில் இதை வீடியோவாக பதிவிட இந்த வீடியோ வைரலானதுடன், சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் இந்த விவகாரத்தில், சிவசேனா ``60 ஆண்டுகளாக கராச்சி பேக்கரிகள் மற்றும் ஸ்வீட் கடைகள் மும்பையில் இயங்கி கொண்டு வருகின்றன. கடைக்கும், பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது கடையின் பெயரை மாற்ற சொல்வதில் அர்த்தமில்லை. இந்தக் கோரிக்கை சிவசேனாவின் நிலைப்பாடு அல்ல" என்று எம்பி சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார். இந்தநிலையில், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், `நாங்கள் 'அகந்த் பாரத்' (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்" என்று கூறியிருக்கிறார்.