ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து அதன்பின் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. அதிலும் குறிப்பாக கொரானா கால ஊரடங்கின் போது பொழுது போக்கிற் க்காக பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பின்னர் அதற்கு அடிமையாக்கிப் போயினர். இதையடுத்து பணம் மற்றும் நிம்மதி இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகள் தடைசெய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக இந்தக் அவசர சட்ட த்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த அவசர சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.