தமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது!

by Loganathan, Nov 25, 2020, 20:41 PM IST

ஓசூர் தமிழக, கர்­நா­டக மாநில எல்­லை­யிலுள்ள நக­ர­மா­கும். இங்கு ஆயிரக்­க­ணக்­கான
தொழிற்­சா­லை­கள் இயங்கி வருகின்­றன. இங்கு தயா­ரிக்­கப்­படும் இயந்­திரங்­கள், வாகனங்­கள் மற்றும் பல்­வேறு வகையான உதிரி­பா­கங்­கள், பல நாடு­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­படுகி­றது.
சாலை வழியாக புதிய வாகனங்­கள் அல்­லது வேறு ஏதேனும் பொருட்­கள் அனுப்பி வைத்­தால் அதற்கு அதிக செலவு மற்றும் குறித்த நேரத்­துக்கு கொண்டு செல்­வ­தில் சிக்­கல், வாக­னங்­கள் சேதம் உள்­ளிட்ட இடை­யூறு­களை சந்திக்க வேண்டியிருந்­தது.

இதைக் கருத்தில் கொண்ட தென்­மேற்கு ரயில்வே நிர்­வாகம் ஓசூரில் இருந்து வங்­கா­ளதே­சத்திற்கு சரக்கு ரயில் இயக்க முடிவு செய்து, அந்த சேவையை முதல் மு­றையாக ஓசூர் ரயில் நிலை­யத்தில் இருந்து நேற்று துவக்கியது. சுமார் 2,000 கி.மீ., துாரமுள்ள வங்­கா­ள­தே­சத்தின் எல்­லையான பென­போல் நகர் வரை, இந்த சரக்கு ரயில் போக்குவரத்து செயல்­பட உள்­ளது.

நேற்று புறப்­பட்ட இந்த சரக்கு ரயிலில் ஓசூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் தொழிற்­சா­லை­யில் , தயா­ரிக்­கும் வாக­னங்­க­ளில் ஒன்­றான தோஸ்த் என்கின்ற சிறிய ரக சரக்கு வாக­னங்­களை , வங்­கா­ள­தே­சத்திற்கு சரக்கு ரயி­லில் ஏற்றி அனுப்­பப்பட்டன. இந்த ரயில் மூன்று நாட்­க­ளுக்குள் வங்­கா­ள­தே­சத்திற்கு சென்­றடை­யும் என ரயில்வே நிர்­வாகம் தரப்­பில் தெரிவித்­த­னர்.

You'r reading தமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை