இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 கைப்பேசி செயலிகளை தடை செய்ய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அலி சப்ளையர்ஸ், அலி பாபா, அலிஎக்ஸ்பிரஸ், கேம்கார்ட், டேட் இன் ஆசியா, சைனீஸ் சோசியல் உட்பட 43 கைப்பேசி செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையம் தகவல் அளித்தது.
இதையடுத்து இந்த 43 கைப்பேசி செயலிகளையும் தடை செய்வதற்கான உத்தரவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று பிறப்பித்தது.
இதற்கு முன்பு கடந்த ஜூன் 29ம் தேதி 59 கைப்பேசி செயலிகளையும், கடந்த செப்டம்பர் 2ம் தேதி 118 கைப்பேசி செயலிகளையும் மத்திய அரசு தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.