இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணத்திற்கு வர சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விர் தெரிவித்தார்.இது தொடர்பாக, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவிலிருந்துஹஜ் பயணம் செய்ய இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதனால், ஹஜ் பயணம் செய்ய டிசம்பர் 10 -ம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதியாக அறிவித்து இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணத்திற்கு வர சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வரும் 2021 ஜனவரி 10 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021- க்கும் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஹஜ் பயணம் செல்ல இணையதளம், மற்றும் ஹஜ் செயலி மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.