மோடிக்கு தந்தை மிரட்டல்... வேதனை தெரிவித்த யுவராஜ் சிங்!

by Sasitharan, Dec 12, 2020, 21:45 PM IST

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், ``அவர்கள் எதை விதைத்தார்களோ, அதையே அறுவடை செய்வார்கள். இது உணர்வுகளின் சண்டை. இதனால் இது போன்ற கருத்துக்கள் தெரிவிப்பது தவறில்லை. பாபர், அவுரங்கசீப் மற்றும் பிரிட்டிஷார் போன்ற காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை விட மோசமான கொடுமைகளை மத்திய அரசு செய்கிறது. மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் முகங்கள் பிசாசு போல இருக்கும்.

விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எல்லைகள் திறக்கப்பட்டால், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ராணுவம் மற்றும் காவல்துறையை ஒதுக்கிவைத்துவிட்டு பிரதமர் மோடிக்கு தனியாக வர வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். யாரவது ஒரு விவசாயி மீதாவது துப்பாக்கியால் சுட்டால், அந்த கணத்தில் இருந்து மோடி அரசின் கவுண்டன் தொடங்கும். அமித் ஷா தனது நண்பர்கள் அதானி மற்றும் அம்பானி ஆகியோரை பஞ்சாபிற்கு முடிந்தால் அழைத்து வரட்டும். அவர்கள் எப்படி திரும்பிச் செல்வார்கள் என்று பார்ப்போம்" என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது இதுதொடர்பாக யுவராஜ் சிங் பேசியுள்ளார். அதில், ``இந்த தேசத்தின் ரத்தநாளங்கள், உயிரோட்டம் விவசாயிகள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை எனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மாறாக விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவாக தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். எந்தவொரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும் என்பதை நம்புபவன் நான்.

ஒரு இந்தியனாக பெருமை அடைகிறேன். அதே போல் ஒரு இந்தியனாக என் தந்தை யோகராஜ் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவரின் கருத்துக்களால் நான் வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். அவரின் கருத்துக்களில் எனக்கு துளி அளவு கூட உடன்பாடு இல்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். அவர் பேசும் அனைத்தும் அவரின் சொந்த கருத்துகள்" எனக் கூறியுள்ளார்.

You'r reading மோடிக்கு தந்தை மிரட்டல்... வேதனை தெரிவித்த யுவராஜ் சிங்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை