வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கும் பிரபல நடிகை..

by Chandru, Dec 13, 2020, 09:49 AM IST

நடிகைகள் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தனர். காஜல் அகர்வால் தொடங்கி சமந்தா வரை உடற்பயிற்சி, யோகா, சமையல், ஆன்லைன் வகுப்பு என பல பணிகளில் ஈடுபட்டனர். கொரோனா கால தளர்வு அறிவிக்கப்பட்டதும் விடுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு கிளம்பினர். காஜல் அகர்வால் தனது கணவருடன் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்று ஒரு மாதம் தங்கி தேனிலவை கொண்டாடினார். அதேபோல் நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், டாப்ஸி, வேதிகா, பிரணிதா, சோனாக்‌ஷி சின்ஹா என பலரும் மாலத்திவில் விடுமுறை பயணம் மேற்கொண்டனர்.

கடற்கரையில் நின்றபடியும் சன் பாத் எடுத்து படுத்த படியும் பல நடிகைகள் நீச்சல் உடை படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளித்தனர். ஒரு வழியாக படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரவே அனைவரும் இந்தியா திரும்பினார்கள். நடிகை காஜல் அகர்வால் அடுத்த வாரம் முதல் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்கிறார். நடிகை சமந்தா விரைவில் காத்து வாக்குல் ரெண்டு காதல் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தொடக்க விழா புஜையுடன் நடந்தது. விஜய்சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் நயன்தாரா, சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறர்கள்.

விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இன்னும் 2 வாரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வரவுள்ளது. அதற்கு சமந்தா இப்போதே தயாராகி வருகிறார். ஐதராபாத்தில் தனது வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதுடன், கிறிஸ்துமஸ் மரத்தை அவரே தயாரிக்கிறார். வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் மரம் போன்ற கார்ட் போர்டுக்கு பச்சை வண்ணம் தீட்டுகிறார். சமந்தாவுக்கு துணையாக அவரது தோழிகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி சமந்தா கூறும் போது, வருடத்தில் மிகவும் பிடித்த நேரம் என மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார்.

You'r reading வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கும் பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை