திருமண மூடிலிருந்து விடுபடாத நடிகை.. புதுகணவருடன் ரொமான்ஸ் படங்கள்..

by Chandru, Dec 13, 2020, 09:51 AM IST

நடிகர் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகள் நிஹாரிகா. இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தார். சில தெலுங்கு படத்திலும் நடித்தார். நிஹாரிவுக்கு சைதன்யா ஜொன்னலகடாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஓட்டலில் திருமண ஏற்பட்டு செய்தனர். திருமண பணிகளை கவனிக்க ஒரு வாரத்துக்கு முன்பே நிஹாரிசிகா ராஜஸ்தான் சென்று திருமண வேலைகளை பார்க்கத் தொடங்கினார். சுமார் 10 நாட்களுக்கு முன்னதாகவே திருமண சம்பிரதாயங்கள் தொடங்கின. தவிர மெஹந்தி, சங்கீத் இசை நிகழ்ச்சி என பல கொண்ட்டாடங்கள் நடந்தன. குடும்பத்தினருடன் சேர்ந்து சிரஞ்சீவி, ராம் சரண் நடனம் ஆடினார்கள்.

கடந்த டிசம்பர் 9ம் தேதி திருமணம் கும்பத்தினர் நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடந்தது. பிறகு அங்கேயே இரவில் திருமண வரவேற்பும் நடந்தது. பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஐதராபாத் திரும்பினார். நேற்று முன்தினம் ஐதராபாத்தில் மற்றொரு திருமண வரவேற்பு நடந்தது. இதில் திரையுலகினர் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளிவந்துள்ளன. திருமண வரவேற்பு விருந்து ஐதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இந்த நிகழ்வு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடனும் நடந்தது மற்றும் விருந்தினர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்று மாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ராம் சரண் நிஹாரிகாவின் இந்த திருமண வரவேற்பில் ராம் சரண் மீண்டும் கலந்து கொண்டார். இதற்காக பிரத்யேகமாக வாங்கப்பட்ட வெளிர்பச்சை நிற லெஹெங் காவில் நிஹாரிகா அழகாகத் தோன்ற சைதன்யா சந்தன நிற ஷெர்வானியுடன் காணப்பட்டார்.
திருமணம், திருமண வரவேற்பு, முன்னதாக திருமண கொண்டாட்டங்கள் என கடந்த ஒரு மாதமாகவே சிரஞ்சீவி குடும்பம் பிஸியாக இருந்தது. தற்போது குடும்பத்தினர் தங்கள் வழக்கமான பணிகளை கவனிக்க தொடங்கிய நிலையில் புதுமண தம்பதிகள் சைதன்யா, நிஹாரிகா இன்னும் திருமண மூடிலேயே இருக்கின்றனர். அவர்கள் ஜெய்பூரில் உள்ள அரண்மனைகளை சுற்றிப் பார்த்து எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

You'r reading திருமண மூடிலிருந்து விடுபடாத நடிகை.. புதுகணவருடன் ரொமான்ஸ் படங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை