சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இப்படத்தை இயக்கினார். விமான அதிபரின் உண்மை கதையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என முதலில் ஒரு தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விமான படையிலிருந்து ஆட்சேபனை இல்லை ( நோ அப்ஜெக்ஷன்) சான்று கிடைக்க தாமதமானதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சில விமான படை காட்சிகளை பற்றி இந்திய விமான படை அதிகாரிகள் படக்குழுவிடம் விளக்கம் கேட்டது. அதற்கான பதிலை முறைப்படி அளித்தனர். அதன்பிறகு விமான படையில் ஆட்சேபம் இல்லை என்ற சான்று கிடைக்கப்பெற்று படம் வெளியானது. தற்போது இந்தி படமொன்று இதுபோன்ற பிரச்னையில் சிக்கி உள்ளது. அனில் கபூர் மற்றும் அனுராக்காஷ்யப் நடித்த படம் ஏ.கே. வெர்சஸ் ஏ.கே.
இப்படத்திலிருந்து வெளியான கிளிப்ஸ் குறித்து இந்திய விமானப் படை அதிருப்தி தெரிவித்துள்ளது. அனில்கபூர் இந்திய விமான படையின் சீருடையை துல்லியமாக அணிந்திருப்பதாகவும், மேலும் விமான படையால் ஏற்றுக்கொள்ளப்படாத தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் ஆட்சேபித்ததுடன் படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குமாறு கூறினர். படத்தில் அனில் கபூட் இந்திய விமான படை அதிகாரியாக நடிக்கிறார். அவரது மகளை வில்லன் கடத்த அதற்கு அனில்கபூர் சில வார்த்தைகளை பயன்படுத்துவதுபோல் காட்சி உள்ளது. இதுகுறித்து அனில் கபூர் விளக்கம் தந்து ஒரு வீடியோ வெளியிட்டு அதில் மன்னிப்பு கோரியிருக்கிறார். அவர் கூறும்போது, "எனது படத்தின் ஏ.கே. வெர்சஸ் ஏ.கே.யின் ட்ரெய்லர் சிலரை புண்படுத்தியுள்ளது.
வசன காட்சியில் நான் ஐ.ஏ.எஃப் சீருடை அணிந்திருப்பதால், யாருடைய உணர்வுகளையும் வேண்டுமென்றே புண்படுத்தவில்லை. அப்படி கருதினால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். படத்தில் இந்த விஷயங்கள் எப்படி வந்தன என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ சில சூழல்களை வழங்க விரும்புகிறேன். என் மகள் கடத்தபடுவது போன்ற காட்சி என்பதால் கோபமும் ஆத்திரமும் அடைந்து உணர்ச்சிவசப்பட்ட பேசியது ஒரு தந்தையின் கோபமாகும். இதில் இந்திய விமானப்படையை அவமதிக்கும் வேண்டும் என்பது எனது நோக்கமோ அல்லது திரைப்படத் தயாரிப்பாளர்களின் நோக்கமோ ஒருபோதும் இல்லை.
இந்திய விமான பாதுகாப்புப் படையினரின் தன்னலமற்ற சேவைக்கு நான் எப்போதும் மிகுந்த மரியாதையும் நன்றியும் வைத்திருக்கிறேன். எனவே யாருடைய உணர்வையும் வேண்டுமென்றே புண் படுத்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் அனில்கபூர் போலவே நெட்ஃபிக்ஸ் இந்தியாவும் மன்னிப்பு கோரியது. எந்தவொரு வகையிலும் இந்திய ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை செய்யக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். எந்த நேரத்திலும் படம் இந்திய விமானப்படையையோ அல்லது நமது ஆயுதப்படைகளையோ பிரதி நிதித்துவப்படுத்தவில்லை. நம் தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான பாதுகாப்பு படை மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை தவிர வேறு எதுவும் இல்லை."