பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை அளித்த ஈரான்.. அதிர்ச்சி தரும் காரணம்!

by Sasitharan, Dec 14, 2020, 17:30 PM IST

ஈரான்: பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் மீது உலகளவில் பெரும் எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமினின் மகன் ரூஹுல்லா ஜாம் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். அமாத் நியூஸ் என்கிற பெயரில் செய்தி வலைத்தளம் ஒன்றை நடத்தி வரும் ரூஹுல்லா ஜாம் மீது அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியது. குறிப்பாக, 2017 மற்றும் 2018-ம் காலகட்டத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களை அரசு ஒடுக்கும் ஆவணங்களைத் தனது அமாத் நியூஸ் செய்தி வலைத்தளத்தில் ரூஹுல்லா வெளியிட்டார் என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியது.

இதற்கிடையே, தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய ரூஹுல்லாவுக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ரூஹுல்லா பிரான்ஸ் தப்ப செல்ல முயன்ற நிலையில், ஈரான் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து, ரூஹுல்லாவுக்கு ஈரான் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர் ரூஹுல்லா ஜாம்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தற்போது, ரூஹுல்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லாவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் ஈரான் அரசு வாங்கியதாகவும், அதன் அடிப்படையில் நியாயமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. மேலும், ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று முதல் நடைபெற இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனத்தில் இந்த 4 ஐரோப்பிய நாடுகளும் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை அளித்த ஈரான்.. அதிர்ச்சி தரும் காரணம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை