உலகையே அச்சுறுத்திய குரானா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்து விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே இந்த தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு கொரோனா தடுப்பூசி குறித்து இந்த மாதம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஹ்லோக்கல் சர்க்கிள்ஸ் என்பது ஒரு சமுதாய சமூக ஊடக தளம்.
இது நாடு முழுவதும் 242 மாவட்டங்களைச் சேர்ந்த 18,000க்கு மேற்பட்டவர்களிடம் சர்வே எடுத்தது. இதில் பதிலளித்தவர்களில் 66 சதவீதத்தினர் ஆண்கள், 34 சதவீதத்தினர் பெண்கள். முதல் கட்ட ஆய்வு அக்டோபர் 15 முதல் 20 வரையிலும். இரண்டாவது கட்ட ஆய்வு டிசம்பர் 10 முதல் 15 வரையிலும் நடத்தப்பட்டது.இதில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள 69 சதவீத இந்தியர்கள் தயங்குகிறார்கள். என்று தெரியவந்தது . கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முன் 61 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் .