சோம்நாத் சிவன் கோயிலில் 1400 தங்கக் கலசம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது லிங்கம் இங்குள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு அன்னியர்களால் இடிக்கப்பட்டது. இரண்டு முறை இடிக்கப்பட்டு, 2 முறை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட கோயிலாகும். தற்போது இந்தியாவில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. கோயில் கோபுரத்தின் மீது இரவில் காட்டப்படும் ஒலி ஒளி காட்சி அருமையாக இருக்கும்.
இந்த கோயில் கோபுரத்தில் தங்கக் கலசங்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து, கோயில் அறங்காவலர் பி.கே.லெகரி கூறுகையில், கோயில் கோபுரத்தில் 1400 சிறிய கலசங்கள் உள்ளன. இந்த கலசங்களின் மீது தங்கத் தகடு பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது வரை 500 தங்கக் கலசங்களைப் பக்தர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர். விரைவில் அனைத்து கலசங்களும் தங்கக் கலசங்களாக மாற்றப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.