இளையராஜாவுக்கு நேர்ந்த கதி.. இசை அமைக்க அனுமதி கிடையாதாம்..

by Chandru, Dec 22, 2020, 10:08 AM IST

சிம்பொனி இசை கம்போசிங் செய்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இசை ஞானி இளையராஜா. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் பல்வேறு மேடை கச்சேரிகள் நடத்தி வந்தார். பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவரை அன்னக்கிளி படத்தில் 1976ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது, அதன் பிறகு இளையாஜாவின் வளர்ச்சி இமயத்துக்கு உயர்ந்தது. கடந்த பல ஆண்டுகளாக இளையராஜா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். எண்ணிலடங்காத பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்துதான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார்.

80களின் பாடல்கள் என்றால் இளைய ராஜா என்ற முத்திரை பதிந்துவிட்டது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாளே கிடையாது. இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் நிலவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த இசை கூடத்திலிருந்து இளையராஜாவை ஸ்டுடியோ நிர்வாகம் வெளியேறச் சொல்லி இருக்கிறது. கடந்த ஆண்டு இதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி போன்ற பிரபல இயக்குனர்கள் பிரசாத் ஸ்டுடியோ முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை.

இளையராஜா இசை அமைத்து வந்த ஒலிப்பதிவு கூடத்தை நிர்வாகம் பூட்டிவிட்டது. அதை எதிர்த்து இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், என்னுடைய உடைமைகள் இசைக் கூடத்தில் உள்ளன. அதை எடுக்க ஸ்டியோவிற்குள் என்னை அனுமதிக்க உத்தர விட வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு ஸ்டுடியோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அவர்கள் தரப்பில் கூறும் போது, இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளது.இதுகுறித்து ஸ்டுடியோ தரப்பு வெளியிட்டுள்ள மெசேஜில்,இளையராஜா தொடர்ந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் எங்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. தனது உடைமைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டிருக்கிறார்.

ஆனால் அங்கிருப்பவை ஏற்கனவே பழுத்தாகிவிட்டது. அவருடைய உடைமைகள் நிர்வாகம் அப்புறப்படுத்திவிட்டது. அந்த கட்டிடத்தை நிர்வாகம் இடிக்கத் தீர்மானித்துள்ளது. இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இளையராஜா தற்போது விஜய் சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத் திற்கு இசை அமைத்து வருகி றார். இதில் ஜூவெல் மேரி, குரு சம்பத்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

You'r reading இளையராஜாவுக்கு நேர்ந்த கதி.. இசை அமைக்க அனுமதி கிடையாதாம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை