எடை அதிகம் குறைந்ததால் மீண்டும் வெயிட் போடும் நடிகை..

by Chandru, Dec 22, 2020, 10:20 AM IST

ஹீரோயின்கள் பலர் உடல் எடை குறைக்கப் பலவிதமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சிலர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து எடை குறைக்கின்றனர். சில நடிகைகள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம் ஒல்லியாகின்றனர்.தமிழில் விஜய்யுடன் சர்க்கார், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஷாலுடன் சண்டை கோழி 2 போன்ற பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் இந்தி படத்திலிருந்து அழைப்பு வரவே அதை ஏற்று கோலிவுட்டில் படங்கள் ஏதும் ஒப்புக்கொள்ளாமல் மும்பை சென்றார்.

பாலிவுட் நடிகைகள் ஒல்லி தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று யாரோ அவருக்குச் சொல்ல அதைக் கேட்டு கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தார். ஒரு கட்டத்தில் எடை குறைந்து ஒல்லியாகி முகம் ஒட்டிப்போய் இவர் கீர்த்தியா என்று கேட்கும் அளவுக்கு மெலிந்துவிட்டார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. இவரை நடிக்க அழைத்துச் சென்ற பட நிறுவனம், கீர்த்தி மிகவும் ஒல்லியாகிவிட்டார். ஒரு குழந்தையின் தாயாக பொருத்தமாக இருக்க மாட்டார் என்று வாய்ப்பை ரத்து செய்தது. விரக்தியடைந்த கீர்த்தி மீண்டும் கோலிவுட்,டோலிவுட் பக்கம் திரும்பி வந்தார்.

பெண்குயின் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படம் ஒடிடியில் வெளியானது. தெலுங்கில் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடியில் வெளியானது. தமிழ், தெலுங்கில் வந்த வாய்ப்புகளை உதறி விட்டு இந்திக்குச் சென்றவர் தற்போது வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். ஆனாலும் அவருக்குப் பழைய மவுசு குறையாத நிலையில் படங்கள் தேடி வருகின்றன. தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவரது மகளாக நடிக்கிறார். செல்வராகவுனுடன் சாணிகாயிதம் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் ராங் டே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒல்லியான தோற்றத்தில் இருந்த கீர்த்தியை ரசிகர்கள் நெட்டில் கிண்டல் செய்து மெசேஞ் பகிர்ந்தனர். இது அவருக்குத் தர்ம சங்கடமானது, இதையடுத்து அவர் உடலில் வெயிட் போட தொடங்கி உள்ளார். முன்பிருந்ததை விட அவர் சற்று வெயிட் கூடியிருக்கிறார். சமீபத்தில் தனது தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி அதற்கான புகைப்படங்களை பகிர்ந்தார்.

அதில், நான் செய்த கிரைம்களின் பார்ட்னர் என்று தோழியை வர்ணித்திருந்தார்.துபாயில் நடிகர் நிதின் உடன் சில வாரங்களுக்கு முன் கீர்த்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் கீர்த்தி . அப்போது ஷூட்டிங் இடைப்பட்ட நேரத்தில் கிடைத்த ஓய்வில் சேரில் அமர்ந்து குட்டி தூக்கம் போட்டார் கீர்த்தி. அதை ஹீரோ நிதின் மற்றும் இயக்குனர் செல்ஃபி சத்தமில்லாமல் எடுத்து நெட்டில் பகிர்ந்து, நாங்கள் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இவர் என்ன செய்கிறார் பாருங்கள் என கேப்ஷன் கொடுத்தனர். அதைக்கண்டு ஷாக் ஆன கீர்த்தி இயக்குனரை குடையால் அடித்துத் துரத்தினார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது.

You'r reading எடை அதிகம் குறைந்ததால் மீண்டும் வெயிட் போடும் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை