லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 5 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் பீதி

by Nishanth, Dec 22, 2020, 13:28 PM IST

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் லண்டனிலிருந்து நேற்று இரவு டெல்லி வந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் லண்டன் உட்பட சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து லண்டனில் சில பகுதிகள் உள்பட இங்கிலாந்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது நிலைமை மோசமாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இதையடுத்து இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை இந்தியா, பிரான்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜெர்மனி உட்பட பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் வரும் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, குவைத் உட்பட சில நாடுகள் தங்களது எல்லையை மூடி விட்டன. இன்று வரை இங்கிலாந்திலிருந்து விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று நேற்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு லண்டனில் இருந்து ஒரு விமானம் டெல்லிக்கு வந்தது.

அதில் விமான ஊழியர்கள் உட்பட 266 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் லண்டனில் இருந்து வந்த விமான பயணிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 5 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் பீதி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை