கார்களில் முன் இருக்கை பயணிகளுக்கு உயிர் காக்கும் ஏர் பேக் கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கிராமங்களிலும் தற்போது வீடுகளில் கார்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்றை காலகட்டத்தில் கார் என்பது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.
இருப்பினும், கார்களில் செல்லும்போது அதிக விபத்துகளும் நடைபெறுகிறது. ஓட்டுநரின் கவன குறைவால் விபத்துகள் அதிகம் நடக்கிறது. விலை உயர்ந்த கார்களில் பொதுவாகவே உயிர் காக்க ஏர் பேக் உள்ளது. இருப்பினும், அனைத்து கார்களிலும் ஏர் பேக் இருப்பது இல்லை. இதற்கிடையே, கார் ஓட்டுநர் இருக்கைக்கு கட்டாயம் ஏர் பேக் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், பல நேரங்களில் முன் இருக்கை பயணிகள் உயிரிழப்பதும் நிகழ்ந்துள்ளதுதான் வருகிறது. ஓட்டுநருக்கு அருகே உள்ள முன் இருக்கையில் பெரும்பாலும் வாகன உரிமையாளர்கள் தான் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், முன் இருக்கையில் இருந்து பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கார்களிலும் முன் இருக்கையில் ஏர் பேக் கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்துள்ளது.