தடை போட ஏன் தமிழகத்தை பின்பற்றனும் ? புதுவை முதல்வர் கேள்வி

by Balaji, Dec 30, 2020, 13:34 PM IST

தமிழகத்தை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை போட முடியாது. எல்லாவற்றிற்கும் தமிழகத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 98 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி மாநில அரசு எடுத்த முடிவுகள் வெற்றி பெற்றுள்ளது . மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் பல தளர்வுகளை அளித்துள்ளது.

பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்யப்படவில்லை. இருப்பினும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொட்டுத் கட்டுக்குள் உள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்ககூடாது, சுற்றுலா வளர்ச்சியடைய வேண்டும், வேலை வாய்ப்பு பெருக வேண்டும். இது தான் அரசின் எண்ணம். புதுச்சேரிக்கு என சில தனித்தன்மை உண்டு.

விடுதிகளில் கொண்டாட்டங்கள் நடத்த மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விடுதிகளில் வந்து தங்கலாம். கடற்கரையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் தடைபோட முடியாது.. எல்லாவற்றிற்கும் தமிழகத்தை பின்பற்ற வேண்டாம் என்ற அவசியம் இல்லை என்றார்.

You'r reading தடை போட ஏன் தமிழகத்தை பின்பற்றனும் ? புதுவை முதல்வர் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை