சந்திரசேகர ராவ் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர் உட்பட 10 பேர் கைது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உறவினர்களை கடத்திய விவகாரத்தில் ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர் அவரது கணவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

by Balaji, Jan 6, 2021, 20:31 PM IST

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. இந்த நில விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியாவும் அவருடைய கணவர் பார்கவ் ரெட்டி ஆகியோர் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளனராம்.

நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு இரண்டு கார்களில் வந்த 15 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் பிரவீன் ராவ், அவருடைய சகோதரர்களான நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரிடம் விசாரணை செய்வது போல் நடித்து வீட்டிலிருந்த பெண்களைத் தனி அறையில் பூட்டி வைத்தனர்.தொடர்ந்து சகோதரர்கள் மூவரையும் கார்களில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இது தொடர்பாக பிரவீன் ராவ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஹைதராபாத் புறநகர் பகுதியில் இரண்டு கார்களை மடக்கி அதிலிருந்த 8 பேரை பிடித்தனர். தொடர் து பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரையும் மீட்டனர். பிடிபட்ட எட்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர்கள் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகில பிரியா, அவருடைய கணவர் பார்கவி ரெட்டி ஆகியோரின் பெயரை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.அந்த அடிப்படையில் அகில பிரியா, அவருடைய கணவர் பார்கவ் ரெட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You'r reading சந்திரசேகர ராவ் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர் உட்பட 10 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை