புதுச்சேரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பூர்வா கார்க் . இவரது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்குக் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதில் கலெக்டருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாட்டில்கள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய குடிநீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது .
இது குறித்து விசாரணை நடத்துமாறு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவர்னர் கிரண் பேடியின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.