குன்னூர் அருகே ஜார்கண்ட் சிறுமி மாயம் : 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடுதல் வேட்டை

by Balaji, Jan 10, 2021, 20:27 PM IST

குன்னூர் அருகே காணாமல் போன ஜார்கண்ட் மாநில சிறுமியை கண்டுபிடிக்க 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் கிரேக்மோர் தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லெட்சுமணன்,சோமன் குமாரி ஆகியோரின் மகள் பிரீத்தி குமாரி (8) கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார்.

மாயமான சிறுமியை அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. அதே பகுதியில் இன்னொரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீஸார் சந்தேகத்தின் பெயரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். எனினும் சிறுமி குறித்து துப்பு கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் பணி கை விடப்பட்டது. இந்த நிலையில் இன்று தடயவியல் நிபுணர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட போலீஸார் இன்று கொலக்கம்பை பகுதியில் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் பாேலீஸ் தனிப்படை குழு அமைத்து மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சில வீடுகள், வனப்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் துப்பு துலங்கி உள்ளது என்றும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்