டெல்லியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

by Nishanth, Jan 13, 2021, 17:17 PM IST

டெல்லியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது கட்டாயம் இல்லை. கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த நவம்பர் முதல் பள்ளிகளை கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உட்பட ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 1ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கேரளாவில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மார்ச் 17 முதல் 30ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் 10 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகின்றன. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும் என்றாலும், வகுப்புகளுக்கு செல்வது கட்டாயமாக்கப்படவில்லை. பெற்றோர்கள் அனுமதி உள்ள மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You'r reading டெல்லியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை