அவர் அன்பான ஹீரோ: நடிகை நிதி அகர்வால் நெகிழ்ச்சி..

Advertisement

நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள படம் “பூமி”. விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது. இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது:“பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம். இயக்குனர் லக்‌ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத்தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் வகையில் கனகச்சிதமாக எடுக்கப்பட்ட படம். ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் திரைப்பயணத்தில் “பூமி” திரைப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இருக்கும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. Disney + Hotstar VIP-ல் படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு சுஜாதா விஜயகுமார் கூறினார். இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது: ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மண் கூட்டணியுடன் இது எனக்கு மூன்றாவது படமாகும். ஒவ்வொரு முறையும் லக்‌ஷ்மண் ஒரு கதையுடன் வரும்போது அது அவரது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ரோமியோ ஜூலியட், போகன், பூமி இவை ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட கதைதளங்களில் வித்தியாசமான கதை சொல்லல் கொண்டிருக்கும். அவரது கதை மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் இருப்பதால் அதை ஈடு செய்யுமளவு எனக்கு பெரும் சாவலை தரும். பூமி கதையை என்னிடம் கூறியபோது அதில் இசைக்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தின் இறுதி வடிவத்தை கண்டேன் இப்படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொங்கல் விருந்தாக இருக்கும். ஹீரோயின் நிதி அகர்வால் கூறியதாவது: வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது. ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு பாத்திரம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஜெயம் ரவி மிகவும் அன்பானவர். சேர்ந்து நடிக்கும் போது மிகவும் ஆதரவாக இருந்தார். அவரது அர்ப்பணிப் பும் சினிமா மீதான அபரிமிதமான காதலும் தான் மக்களிடம் அவருக்கு இத்தனை அன்பை பெற்று தந்துள்ளது. அவரது 25 வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மன்.

இது 100 சதவீதம் குடும்பங்கள் கொண்டாடும் படம். Disney + Hotstar VIP இப்படத்தினை பொங்கல் திருநாளன்று அனைத்து வீடுகளுக்கும் விருந்தாக கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் அழுத்தமான கதை கொண்ட இப்படம் மிக பிரமாண்டமான நடிகர் குழுவை கொண்டுள்ளது. இவ்வாறு நிதி அகர்வால் கூறினார். நடிகர் ரோனித் ராய் எதிர்மறை தன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்க அவருடன் சதிஷ், தம்பி ராமையா, தத்தோ ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படம் உழவர்களின் கொண்டாட்ட பண்டிகை சமயத்தில், பொங்கல் திருநாளில் 14 ஜனவரி 2021 அன்று Disney + Hotstar VIP வெளியாகிறது. மூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials உடைய முதல் தமிழ் தொடரான ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டது. மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது என்கிறது பூமி படக்குழு.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>