இன்சூரன்ஸ்: அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

by Balaji, Jan 15, 2021, 14:26 PM IST

இன்சூரன்ஸ் துறையில் தற்போது அன்னிய முதலீட்டின் அளவு 49 சதவீதமாக உள்ளது.
தனியார் வங்கித் துறையில் அன்னிய முதலீட்டின் அளவு 74 சதவீதமாக உள்ளது. இதே போல், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019ம் ஆண்டு பட்ஜெட் உரையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிகள் கண்டறியப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமும் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தது.

2020-21ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனை செயல்படுத்த வேண்டுமாயின் இன்சூரன்ஸ் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்துவதன் மூலம், இத் துறையில் முதலீடுகள் அதிகளவில் பெருக வாய்ப்பு உண்டு. இதனால், வர்த்தகம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது அரசின் முதலீட்டு குறைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

You'r reading இன்சூரன்ஸ்: அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை