மூத்த தலைவர்கள் ஆதரவு.. முதல்வர் நாற்காலியில் மகன்.. சந்திரசேகர ராவ்வின் `பலே திட்டம்?!

by Sasitharan, Jan 21, 2021, 20:05 PM IST

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி. ராமாராவிற்கு தனது கட்சியில் பொறுப்பை வழங்கினார் சந்திரசேகர ராவ்.

அப்போதிலிருந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ராமாராவே கவனித்து வருகிறார். இதற்கிடையே, சந்திரசேகர ராவின் மகள் கவிதா முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு கவிதா தோல்வியுற்றார். அதன் பின்னர்தான் கவிதாவிற்கு தற்போது மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதனைபோல், முதல்வர் சந்திரசேகர ராவின் அக்கா மகன் ஹரீஷ் ராவும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் அமைச்சரவையில் தற்போது அமைச்சராகவும் உள்ளார்.

அரசியலில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திரசேகர ராவ் வளர்த்து வருவதற்கு பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்று விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இருப்பினும், தற்போது நடத்த துப்பாக்கா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இது மேலும், டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 44 வார்டுகளில் வெற்றி பெற்று 2-வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தான், இந்நிலையில், சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள தனது மகன் ராமாராவை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ராமாராவை முதல்வராக அமர வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களான ஈடல ராஜேந்தர் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

You'r reading மூத்த தலைவர்கள் ஆதரவு.. முதல்வர் நாற்காலியில் மகன்.. சந்திரசேகர ராவ்வின் `பலே திட்டம்?! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை