ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கிடையே, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிக குறைந்த ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்தியாவின் இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வினுடன் இணைந்து திறமையாக விளையாடி 3-வது டெஸ்ட் போட்டியை டிரா செய்து முடித்து வைத்தனர்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து இந்தியா டுடே ஊடகத்துக்கு பேட்டியளித்த ஹனுமா விஹாரி, பல்வேறு நாம் அறியதாக விஷயங்களை பகிர்ந்துள்ளார். போட்டியில் ஒரு டிம் படுதோல்வியை சந்தித்தால், மோசமான விமர்சனங்கள் வரும். ஆனால் இவையெல்லாம் அணிக்கு வெளியேதான் நடக்கும். இருப்பினும், ஒரு அணியாக நாங்கள் முதல் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தப்பின் ஒற்றுமையாகவே இருந்தோம்.
அந்தப் போட்டியின் மோசமான தருணங்கள் குறித்து நாங்கள் பேசவேயில்லை. எதிர்காலத்தில் இதுபோல் நடக்கக் கூடாது என்று மட்டும் நாங்கள் உறுதியாக இருந்தோம் தொடர்ந்து, தொடரை நாங்கள் 3 டெஸ்ட் போட்டிகள் என்றுதான் எடுத்து கொண்டோம். இதனால் தான் வெற்றி பெற்றோம். பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் எங்களை உற்சாகப்படுத்தினார் என்றும் தெரிவித்தார்.