ஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

by Sasitharan, Jan 27, 2021, 19:45 PM IST

போக்சோ சட்டம் தொடர்பான மும்பை உயர் நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் மும்பையில், 39 வயதான ஒரு நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரிடம் பாலியல் வன்கொடுமை ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் இதனை பாலியல் வன்கொடுமை என்று எடுத்துக்கொள்ள முடியாது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடையை அகற்றாமல், தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது. எனவே, அவரை விடுதலை செய்கிறேன் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மனித உரிமை அமைப்புகள், பெண்கள் ஆணையம் என பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தேசிய பெண்கள் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, பெண்ணின் ஆடைக்கு மேல் பாலியல் துன்புறுத்தல் செய்தும், உடலோடு உடல் தொடவில்லை, ஆடைக்கு மேல் கைவித்து தொந்தவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது எனக்கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளது. இது கவலைக்குரியது. இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று என்று வாதிட்டார்.

வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவு முன்னோடியில்லாதது மற்றும் ஆபத்தான முன்னுதாரணத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது என்று ஏ.ஜி வேணுகோபால் தெரிவித்துள்ளார். எனவே, ஏ.ஜி வேணுகோபால் இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

You'r reading ஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை